மதுரை ரஜினி ரசிகர் பாலநமச்சிவாயத்திற்கு நேர்ந்த பரிதாபம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற முன்னாள் செயலாளராக இருந்து வந்தவர் பாலநமச்சிவாயம். இவர் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர் இதனால் பலத்த காயமடைந்த பாலநமச்சிவாயம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


ரஜினியின் தீவிர ரசிகராக இருந்து வந்தவர் பாலநமச்சிவாயம் இதையடுத்து இவருக்கு ரசிகர் மன்றத்தில் செயலாளர் பதவி கிடைத்தது இந்நிலையில் இவர் ரஜினி படம் திரைக்கு வந்தால் பால் அபிஷேகம் செய்வது போஸ்டர் ஒட்டுவது மற்றும் அதிக அளவில் பேனர்கள் வைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது படங்கள் வந்தால் அருகில் உள்ள கோவில்களில் அன்னதானம் வழங்கி வந்துள்ளார்.

இதனால்  ரசிகர் மன்ற ஆதரவாளர்களிடம் பெரும் நன்மதிப்பையும் பெற்று வந்துள்ளார் இந்நிலையில் அவருக்கும் மன்ற தலைவர் பாபு விற்கும் இடையே அடிக்கடி மோதல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இருவருக்கும் இடையேயான தகராறு நாளடைவில் கோஷ்டி மோதலாக மாறியது. இதையடுத்து பாலநமச்சிவாயம் மன்றத்தில் மட்டுமின்றி ரியல் எஸ்டேட் தொழிலிலும் வலம் வந்தார்.

இதையடுத்து அவர் மீது பல புகார்கள் எழுந்த நிலையில் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் பாபு இது குறித்து ரஜினிக்கு தெரியும்படி புகார் ஒன்றை அளித்துள்ளார் இதனால் பாலநமசிவாயத்துக்கு எந்த ஒரு பதவியையும் கிடைக்காதபடி செய்துள்ளார் பாபு. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்த பாலநமச்சிவாயத்தை மர்ம நபர்கள் அரிவாள், வாள், கத்தி ஆகியவற்றால் தாக்கியுள்ளனர்.

உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பாலநமச்சிவாயம் கிடந்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.  பின்னர் அப்பகுதி மக்கள் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில் கைது செய்த போலீசார் அந்த மர்ம நபர்கள் யார் என தேடி வருகின்றனர். இதில் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் பாபுவிற்கு தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.