ரஜினி வந்தாச்சு, இனி தண்ணீர் பஞ்சம் தீர்ந்திடும்! ஜூலையில் கட்சி அறிவிப்பு!

மோடி உலக நாடுகளை சுற்றிப் பார்த்துவிட்டு அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து இளைப்பாறுவார்.


அப்படித்தான் ரஜினிகாந்தும். சினிமாக்களில் நடித்துவிட்டு அவ்வப்போது சென்னைக்கு திரும்பி வருவார். அப்போது தமிழக மக்களுக்கு நல்லதாக பல செய்திகளை சொல்லிவிட்டுப் போவார். அந்த வகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா இணைந்து நடித்துவரும் தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்துள்ளது.

இதனால் மும்பையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க ரஜினி ரசிகர்கள் களம் இறங்கியதற்கு பாராட்டு தெரிவித்தார். ரசிகர்கள் செய்வது ரொம்ப நல்ல விஷயம். இந்த விஷயங்களை நீண்ட நாட்களாகவே செய்துவருகிறோம்.

ஆனால், இப்போதுதான் வெளியில் தெரிகிறது என்றார். அதேபோன்று மக்கள் அனைவரும் முன்வந்து ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட எல்லா நீர்நிலைகளையும் தூர்வார வேண்டும் என்றார்.இன்னமும் பா.ஜ.க. நதிநீர் இணைப்பு பற்றி எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லையே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, இப்போதுதானே வந்திருக்கிறார்கள். விரைவில் செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

ஜூலை மாதம் கட்சியின் முதல் கட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஏற்கனவே தமிழருவி மணியன் தெரிவித்திருக்கிறார். அதனால், ரஜினி என்ன அறிவிக்கப்போகிறார் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.