மகள் என்றார்! பிறகு மிரட்டினார்! பாலியல் வல்லுறவு கொண்டார்! முகிலன் மீது இளம் பெண் போலீசிடம் புகார்!

மற்றவர்களிடம் தன்னை மகள் என்று அறிமுகப்படுத்தி பிறகு மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மீது இளம் பெண் புகார் அளித்துள்ளார்.


கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் இசை என்கிற பெயரில் பொது விவகாரங்களில் ஈடுபட்டு வருகிறார். சுற்றுச் சூழல் ஆர்வலர் முகிலனோடு இணைந்து பல்வேறு போராட்டங்களில் ராஜேஸ்வரி என்கிற இசை கலந்து கொண்டு வந்தார். இந்த நிலையில் கரூர் குளித்தளை காவல் நிலையத்தில் அவர் ஒரு புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் சுற்றுச் சூழல் ஆர்வலர் முகிலனுடன் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதாக ராஜேஸ்வரி கூறியுள்ளார். அப்போது தன்னிடம் அன்பாகவும் பாசமாகவும் முகிலன் பழகியதாகவும் மற்றவர்களிடம் தன்னை தனது மகள் போன்றவர் என்று அறிமுகம் செய்து வைத்ததாகவும் ராஜேஸ்வரி கூறியுள்ளார்.

ஆனால் பிறகு திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னுடன் உடலுறவு கொள்ள முயற்சித்ததாகவும் தான் மறுத்ததால் மிரட்டி பல முறை உடலுறவு கொண்டதாகவும் முகிலன் மீது ராஜேஸ்வரி புகார் தெரிவித்துள்ளார். ஆனால் உடலுறவு கொண்டுவிட்டு திருமணம் செய்யாமல் முகிலன் ஏமாற்றி வருவதாகவும் ராஜேஸ்வரி கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் முகிலன் மீது வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக முகிலன் மாயமாக உள்ள நிலையில் அவர் மீது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.