ராஜாத்தி அம்மாள் கால்கடுக்க காத்திருந்து அத்திவரதர் தரிசனம்! கனிமொழிக்கு மந்திரி பதவிக்கு ஏற்பாடாம்!

இன்று காஞ்சிபுரத்தில் அத்திவரதரை பிரபல ரவுடி வரிச்சூர் செல்வமும், தி.மு.க.வின் முன்னாள் முதல்வரும் பகுத்தறிவாளருமான கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாளும் தரிசனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வரிச்சூர் செல்வத்துக்கு பெரிய அறிமுகம் வேண்டியதில்லை. ஏனென்றால், கழுத்து நிறைய தங்கசெயின் போட்டு, தமிழக பெண்களை பெருமூச்சுவிட வைத்தவர். வரிச்சூர் செல்வம் மீதுஇரண்டு கொலை வழக்குகள் உள்ளிட்ட வழிப்பறி, மிரட்டல், ஹிட்நாப் போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.

அதனால் இரண்டு முறை என்கவுன்டர் செய்வதற்கு போலீஸ் முயற்சி செய்தபோதும், அதில் இருந்து தப்பிவிட்டார். அப்படிப்பட்ட வரிச்சூர் செல்வம், இன்று அத்திவரதரை சிறப்பு தரிசனமாக முன்னே அமர்ந்து தரிசனம் செய்திருக்கிறார்.

பொதுவாக அந்த இடத்தில் சில நிமிடங்கள் அமர்ந்து அத்திவரதரை தரிசித்து எழுவதற்கு 25 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். இந்தப் பணம் கோயிலுக்கோ அல்லது அறநிலையத் துறைக்கோ செல்வது இல்லை, இதனை முழுக்க முழுக்க கோயில் குருக்களே பிரித்துக்கொள்கிறார்கள்.

அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டதால், இனிமேல் தன்னை போலீஸ் கண்டுகொள்ளாது என்று சந்தோஷமாகி இருக்கிறாராம் வரிச்சூர் செல்வம். அதே போன்று ராஜாத்தியம்மாளும் இன்று அத்திவரதரை சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார்.

கனிமொழிக்கு எப்படியாவது அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிராராம். வரிச்சூர், ராஜாத்தியம்மாள் போன்றவர்கள் கோரிக்கைகளை கவனிப்பதுதான் அத்திவரதருக்கு முக்கியமா..?