வேன் மற்றும் கார் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியான சம்பவம் ராஜபாளையம் அருகே நேர்ந்துள்ளது.
குற்றாலத்தில் உற்சாகம்! ஊர் திரும்பியவர்கள் கார் மீது அதிவேகத்தில் மோதிய வேன்! 4 பேர் துடிதுடித்து பலியான பரிதாபம்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள தென்காசி நெடுஞ்சாலையில், தென்காசியில் திருமணம் ஒன்றை முடித்துவிட்டு மதுரை திரும்பிய வேன் ஒன்று அப்பகுதியில் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதுகுறித்து தகவல் அருகிலிருந்த மருத்துவமனை மற்றும் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு முறையான காரணத்தையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.