ராஜாக்கமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பேருந்தில் பயணம் செய்த 18 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
எதிரெதிரே அசுர வேகம்..! ஒரே நொடி..! நேருக்கு நேராக மோதிய காலேஜ் பஸ்கள்..! பிறகு அரங்கேறிய திக் திக் சம்பவம்!

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜாக்கமங்கலம் பகுதியில் கல்லூரி மாணவிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து காலை நேரத்தில் வெள்ளிச்சந்தை நோக்கி வந்து கொண்டிருந்த போது சூரப்பள்ளம் அருகே பேருந்து சென்று கொண்டிருக்கும் போது அதே வழியாக பேயோட்டில் இருந்து ராஜாக்கமங்கலம் நோக்கி மற்றொரு தனியார் கல்லூரி பேருந்து ஒன்று வந்துள்ளது.
இந்நிலையில் பேருந்து ஓட்டுனரின் கவன குறைவால் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் காலை நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாகவே இருந்துள்ளது. இதனால் விபத்து நிகழ்ந்த உடனேயே சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனே ஓடி வந்து விபத்தில் காயம் முற்றவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பேருந்து விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் மீட்டு உடனே ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் விபத்துக்குள்ளான இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த மாணவ, மாணவிகள் அனுஅக்ஷயா, சாலினி, அஸ்மின், திவ்யா, அஜிஸ்மா, லிபிஷா, சுஷ்மா, அபிஷா, சஜிதா, அஸ்லின்ஸ்டெபி, மற்றொரு அபிஷா, ராம் பிரபு, சிஜித், ராதுரவி, அபினேஷ், ரஜின்குமார், விஜினின்ஷா, ஜெரிஷ் ஆகிய 18 பேரும் படுகாயம் அடைந்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயம் பட்டவர்களை உடனடியாக தங்களது வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதையடுத்து விபத்தில் காயமடைந்த மாணவ மாணவிகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பேருந்துகள் மோதிக் கொண்டதில் சாலையோரத்தில் இருந்த இரு சக்கர வாகனத்தின் மீதும் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனம் சேதம் அடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்து மீண்டும் சீரான நிலைக்கு கொண்டுவந்தனர்.இந்னிலையில் இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.