நடிகர் விஜய் ஒரு புத்தகம் போன்றவர். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை மற்றவர்கள் கற்றுக் கொள்ளலாம் என்று பிரபல நடிகை அமலா பால் கூறியுள்ளார்.
உண்மையில் நடிகர் விஜய் எப்படிப்பட்டவர்?உடன் நடித்த நடிகை அமலா பால் உதாரணத்துடன் வெளியிட்ட புதிய தகவல்!
தமிழ்சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்கள் மற்றும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் நடிகை அமலா பால். சமீபத்தில் வெளிவந்த ஆடை திரைப்படத்தில் தனது திறமையான மற்றும் துணிச்சலான நடிப்பின் மூலம் சினிமா உலகத்தையே தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை அமலாபால். இவர் தற்போது அதோ அந்த பறவை போல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அட்வென்ச்சர் திரில்லர் படமாக உருவாகி கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குனர் கே ஆர் வினோத் இயக்கிவருகிறார். நடிகை அமலாபால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் என் ஃபேவரட் நடிகர்களில் விஜய் ஒருவர். நான் 10 ஆண்டு காலமாக சினிமாவில் நடித்துக் கொண்டு வருகிறேன். இதுவே மிக கடினமாக இருக்கிறது. பல விஷயங்களை இழக்க நேரிடுகிறது.
ஆனால் நடிகர் விஜய் இத்தனை வருடங்கள் ஓயாமல் உழைத்துக் கொண்டே இருப்பது சாதனைதான் எனவும் நடிகை அமலாபால் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய நடிகை அமலாபால் நடிகர் விஜய் ஒரு புத்தகம் போன்றவர். அவரிடமிருந்து மற்றவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் கூறியிருந்தார். நடிகை அமலாபால் தலைவா படத்தில் நடிகர் விஜயுடன் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.