கருணாநிதியை முதல்வர் ஆக்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., நன்றிக் கவிதை எழுதி பாராட்டிய கருணாநிதி!

கருணாநிதியின் அரசியல் வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்றால் மிகையல்ல.


திரையுலகம் முதலே தன்னுடன் இணைந்துவரும் நட்பு என்பதாலே, அத்தகைய காரியத்தை செய்தார் எம்.ஜி.ஆர். முதன்முதலாக தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்த வெற்றிக்குக் காரணம் எம்.ஜி.ஆர் என்று ஒரு பாராட்டுக் கவிதை எழுதினார் கருணாநிதி. இதுதான் அந்தக் கவிதை.

வென்றாரும் வெல்வாரும்  இல்லாத வகையில் ஒளிவீசும் தலைவா.. குன்றணைய புகழ்கொண்ட குணக்குன்றேமுடியரசர்க்கில்லாத செல்வாக்கெல்லாம் முழுமையுடன் பெற்று விளங்கும் முழுமதியே! தென்னாடும் தென்னவரும் உள்ள வரை மன்னா உன் திருநாமம் துலங்கவேண்டும் உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர் உள்ளங்கள் அதைக்கண்டு மகிழ வேண்டும்.

இந்தக் கவிதை மூலம்தான் புரட்சித்தலைவர் மனதில் அசைக்கமுடியாத இடம் பிடித்தார் கலைஞர் கருணாநிதி. இந்த நேரத்தில்தான் எதிர்பாராதவிதமாக அண்ணா மறைந்தார். தற்காலிக முதல்வரான நாவலர் நெடுஞ்செழியன் நிரந்தர முதல்வர் பொறுப்புக்கும் வருவார் என்று கட்சியினர் எதிர்பார்த்தனர்..

ஆனால் புரட்சித்தலைவரிடம் சரண் அடைந்தார் கருணாநிதி. காட்சிகள் மாறின. தன்னை நம்பிவந்த கருணாநிதிக்காக, திமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து கொடுத்த புரட்சித்தலைவர், அனைவரையும் தன் வசம் இழுத்து கருணாநிதியை முதல்வர் பதவியில் அமரச்செய்தார்.