5 வாக்குகள் மட்டுமே பெற்றதாக ஊடகங்களை முட்டாளாக்கிய அழுகை வேட்பாளர்! உண்மையை தெரிஞ்சிக்கங்க!

பஞ்சாப் மாநிலத்தில் 5 வாக்குகள் மட்டுமே பெற்றதாகவும் ஆனால் தனது குடும்பத்தில் மொத்தம் ஒன்பது பேர் உள்ளதாகவும் கூறி சுயேட்சை வேட்பாளர் ஒருவர் அழுத விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.


மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் நாடு முழுவதும் வேட்பாளர்கள் மட்டுமன்றி பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி, சோகம், கோபம் என பல்வேறு வகையான உணர்ச்சிக் கலவைகளில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந் ஒரு சுயேச்சை  வேட்பாளரின் சோகம் சற்று வித்தியாசமானது. 

ஜலந்தரைச் சேர்ந்தவர் நீத்து ஷட்டரன் வாலா. மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். இவருக்கு வழக்கமான சுயேச்சை வேட்பாளர்களைப் போல குறைந்தபட்சம் சில நூறுகள் இல்லாவிட்டாலும் சில 10 ஓட்டுகளாவது கிடைத்திருந்தால் ஓரளவு மகிழ்ச்சியடைந்திருப்பார்.

ஆனால் இவருக்கு கிடைத்தது வெறும் 5 ஓட்டுகள். அதிலும் பெரிய சோகம் என்னவென்றால் இவரது  குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையே 9 பேர் தனது குடும்ப உறுப்பினர்களே தனக்கு வாக்களிக்கவில்லை என்ற சோகம் மனதைப் பிழிய செய்தியாளர்கள் மத்தியில் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார் நீத்து.

நீத்துவின் அழுகை இந்தியா முழுவதும் வைரல் ஆனது. இந்த நிலையில் உண்மையில் அவர் எத்தனை ஓட்டுகள் பெற்றார் என்று ஆராய்ந்த போது தான் நீத்து செய்த மோடி அம்பலமானது. உண்மையில் நீத்து 856 வாக்குகள் பெற்றுள்ளார். இதனை மறைத்து தனக்கு ஐந்து ஓட்டுகள் மட்டுமே கிடைத்ததாக கூறி கண்ணீர் விட்டு கதறியுள்ளார் நீத்து.

அதாவது ஊடக வெளிச்சத்திற்காக அவர் இவ்வாறு செய்துள்ளார். அதனையும் உண்மை என்று நம்பி அனைத்து முன்னணி ஊடகங்களும் நீத்துவை செய்தியாக்கி பிரபலமாக்கிவிட்டனர். தற்போது உண்மை வெளியாகியுள்ளது.