உயிருக்கு போராடிய காதலி! ஐசியுவுக்கே சென்று தாலி கட்டிய காதலன்..! ஆனால்? அதிர்ச்சி சம்பவம்!

பூனேவில் தன்னை காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காதலனை மருத்துவமனையில் காவலர்கள் முன்னிலையில் கரம் பிடித்துள்ளார் இளம் பெண்.


பூனேவில், சூரஜ் நலவாடே என்ற இளைஞர், காதலிப்பதாக கூறி இளம் பெண் ஒருவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவ்வ போது வெளியில் அழைத்து சென்று ஊர் சுற்றி வந்துள்ளார். இந்த நிலையில் காதலர்கள் இருவரும் காதல் மயக்கத்தில் இருந்ததால் ஒரு கட்டத்தில் எல்லை மீறி உடலுறவு வரை சென்றுள்ளதாக தெரிகிறது. 

காதலன் சூரஜ் ஆசை தீரும் வரை உல்லாசமாக இருந்து விட்டு பின்னர் இளம் பெண் திருமண பேச்சை எடுத்தவுடன் லாவகமாக கம்பி நீட்டியுள்ளார், இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண். தற்கொலைக்கு முயன்றதால் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார், இதனை அடுத்து போலீசாரிடம் சூரஜ் மீது கற்பழிப்பு வழக்கு போட்டார். 

இதனை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண்ணை சூரஜ் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ள போலீசாரால் மிரட்டபட்டுள்ளார் என கூறபடும் நிலையில், சூரஜ் காதலித்த பெண்ணையே திருமணம் செய்துள்ளார். இது குறித்து வெளியான புகைப்படங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.