திருமணமான 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்து கொண்டு, இளம் பெண்ணை ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உன் புருசன் தான் எனக்கும் புருசன்..! திருமணமாகி 4 மாதங்களில் மாயமான கணவனை தேடிச் சென்ற இளம் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் சிவனேசன். இவர் ஈரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஈரோட்டில் வசித்து வரும் பெண் ஒருவரை வீட்டாருக்கு தெரியாமல் 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் திருமணம் செய்துகொள்ளும்படி பெற்றோர் வற்புறுத்தி இருக்கின்றனர்.
இதனால் தனது சொந்த ஊருக்கு சென்ற சிவனேசன், அவரது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்பு இவருக்கு பிருந்தாதேவி என்ற பெண்ணுடன் இரண்டாவதாக திருமணம் நடந்துள்ளது. பிருந்தாதேவியிடம் ஏற்கனவே திருமணம் நடந்த விஷயத்தை மறைத்து, திருமணமான சில நாட்களில் மீண்டும் ஈரோடு திரும்பிய சிவனேசன். நான்கு மாதங்களாக வீட்டிற்கு செல்லவில்லை.
இதனையடுத்து பிருந்தாதேவி தொலைபேசி மூலம் அழைத்தபோது, சிவனேசனிடம் இருந்து சரியான பதில் இல்லை. இதனால் சந்தேகமடைந்த பிருந்தாதேவி சிவனேசன் பணிபுரியும் இடத்திற்கு சென்று விசாரித்ததில் பேரதிர்ச்சி காத்திருந்தது. அப்போதுதான் ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் ஆனதும் அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்தது.
இதனால் மனம் உடைந்த பிருந்தாதேவி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிவனேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.