வரலாறு காணாத வெயில்! அனல் காற்று! சமாளிக்க நிர்வாண பயணம்! எங்கு தெரியுமா?

ஐரோப்பிய நாடுகளை வெயிலும், அனல் காற்றும் ஒன்று சேர்ந்து வாட்ட தொடங்கியுள்ளது.


பல இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை தாண்டியுள்ளதால், ஐரோப்பிய மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். எங்கு பார்த்தாலும் மக்கள் நீச்சல் குளங்களிலும், நீர் நிலைகளிலும் கும்பல் கும்பலாக குளியல் போட்டு வருகின்றனர். சாலைகளில் செல்லும் பலர்  சிறிதுகூட கூச்சமின்றி, 2 பீஸ் உடைகளில் நடமாட தொடங்கியிருக்கிறார்கள். சிலர் நிர்வாணமாகவே  ஸ்கூட்டர் ஓட்டிச் செல்கிறார்கள். அந்தளவுக்கு ஐரோப்பிய மக்களை அனல் காற்று வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. 

சகாரா பாலைவனத்தின் அனல் காற்று அப்படியே மேலே கிளம்பி ஐரோப்பிய நாடுகளை வாட்டி வதைப்பதாகவும், ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்பெயின், ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இதனால் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் எனவும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். பொது இடங்களில் மக்கள் விரும்பினால் நீராட நீச்சல் குளங்களில் நீர் நிரப்பும் அளவுக்கு, அந்தந்த நாட்டின் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஐரோப்பிய மக்கள் போதிய அளவு நீர்ச்சத்து உணவுகளை உட்கொண்டு, வெயிலில் அலையாமல், பாதுகாப்பாக இருக்கும்படி, சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. ஃபிரான்ஸ் அரசு இதுபற்றி கூறுகையில், அன்றாட அலுவலகப் பணிகள் நாடு முழுவதும் வீசும் அனல் காற்றால் பாதிப்படைந்துள்ளன, எனக் குறிப்பிட்டுள்ளது.

பனிப்பிரதேசமான சுவிட்சர்லாந்து கூட இந்த முறை தப்பவில்லையாம். அங்கும் வெயில் வாட்டி வதைக்கிறதாம். ஜெர்மனியில், கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 101.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை கடந்த புதன்கிழமை பதிவாகியுள்ளது.

இதுவே ஸ்பெயின் நாட்டில், 109 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. அனல் காற்றை சமாளிக்க முடியாமல் சாலைகளில் நிர்வாணமான நிலையில் சிலர் ஸ்கூட்டர் ஓட்டிச் செல்வதாகவும், அவர்களை தடுக்க முடியவில்லை எனவும் ஜெர்மனி போலீசார் குறிப்பிடுகின்றனர்.

கடைசியாக, கடந்த 2003ம் ஆண்டு இப்படி ஏற்பட்ட ஒரு அனல்காற்று பாதிப்பில் 20,000 பேர் ஐரோப்பிய நாடுகளில் உயிரிழந்தனர். அதைவிட அதிகமான பாதிப்பு இந்த முறை ஏற்படலாம் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ஐரோப்பிய மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.