எஸ்பி பாண்டியராஜனை மாத்துங்க! அஸ்ரா கார்க்க கூப்பிடுங்க! மரண பயத்தில் பொள்ளாச்சி வீடியோ கும்பல்!

பொள்ளாச்சி ஆபாச வீடியோ கும்பலை ஒழிக்க வேண்டுமென்றால் அஸ்ரா கார்க் போன்ற ஒரு நேர்மையான அதிகாரி தான் கோவை எஸ் பி ஆக இருக்க வேண்டும் என்று பொள்ளாச்சி மக்கள் கூறி வருகின்றனர்.


பொள்ளாச்சி ஆபாச வீடியோ கும்பலுக்கு ஆதரவாக தற்போதைய எஸ்பி பாண்டியராஜன் செயல்பட்டு வருவதாக ஒரு புகார் உள்ளது. விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இந்த விவகாரத்தில் பார் நாகராஜனுக்கு அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வெளிப்படையாக பேட்டி கொடுத்தவர் பாண்டியராஜன்.

அதுமட்டுமல்லாமல் பொள்ளாச்சி பாலியல் கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை மட்டுமல்லாமல் பெயர் உள்ளிட்ட விவரங்களையும் செய்தியாளர் சந்திப்பிலேயே வெளியிட்டு செய்தியாளர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார் எஸ்பி பாண்டியராஜன். இப்படி பொள்ளாச்சி வீடியோ கும்பல் குறித்த வழக்கை எஸ்பி பாண்டியராஜன் துவக்கம் முதலே சின்னாபின்னமாக்கும் வகையிலேயே செயல்பட்டு வருவதாகவும் ஒரு புகார் உள்ளது.

எனவே பொள்ளாச்சி வீடியோ கும்பல் தொடர்பான வழக்கு நேர்மையாக நடைபெற வேண்டுமென்றால் அஸ்ரா கார்க் போன்ற நேர்மையான மற்றும் துணிச்சலான ஒரு அதிகாரி கோவை மாவட்டத்திற்கு தேவை என்ற பொள்ளாச்சி மக்கள் கூறி வருகின்றனர். அஸ்ரா கார்க் திருப்பூரில் பணியாற்றிய போது அங்கு இருந்த ரவுடிகளை ஒழித்து திருப்பூரை அமைதியான ஒரு நகரமாக மாற்றி வைத்து இருந்தார். இதேபோல் தர்மபுரியிலும் அஸ்ரா கார்க் பணி அப்பகுதி மக்களால் மெச்சத் தகுந்த வகையில் இருந்தது.

இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டித்தான் பொள்ளாச்சி பகுதி மக்கள் அஸ்ரா கார்க்கை உடனடியாக கோவை எஸ் பி ஆக மாற்றி பொள்ளாச்சி வீடியோ கும்பலுக்கு உடனடியாக தக்க தண்டனை வாங்கித்தர வேண்டும் என்ற கோரிக்கையை தெரிவித்து வருகின்றனர். அஸ்ரா கார்க் கோவை எஸ்பியாக நியமிக்கப்பட வேண்டும் என்று ஆன்லைனில் பலரும் கருத்துக்களை முன்வைத்து ஒரு இயக்கமாகவே ஆரம்பித்துள்ளனர்.