கோடிக்கணக்கான ரூபாய் மோசடி! பாங்காங்கில் உல்லாசம்! சிம்புவுக்கு எதிராக ஒன்று திரளும் தயாரிப்பாளர்கள்! கமிஷ்னர் ஆபீசில் பஞ்சாயத்து!

சென்னை: சினிமா நடிகர் சிலம்பரசன் மீது போலீஸ் புகார் தர தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


 ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த சிலம்பரசன், அனைத்து திறமைகள் இருந்தாலும், படிப்படியாக ஒரு சப்பாணியாக மாறிவிட்டார். தற்போது, அவருக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அத்துடன், திருமணம் ஆகாத விரக்தியில் சிம்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், அவர் மற்றவர்களை சந்திப்பதை தவிர்த்துவிட்டு, பாங்காக்கில் செட்டில் ஆகிவிட்டதாகவும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. ஆம், சில மாதங்கள் முன்பாக, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிம்புதான் என சீமான் கூறினார். இதையடுத்து, சில முன்னணி சினிமா தயாரிப்பாளர்கள் சிம்புவை தங்களது புதிய படங்களுக்கு, ஒப்பந்தம் செய்தனர்.

இதற்காக, கோடிக்கணக்கான ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக் கொண்ட சிம்பு, ஷூட்டிங்கிற்கு வராமல் இழுத்தடித்து வந்தார். இதனால், ஏஏஏ படத்தின் 2வது பாகம் பாதியிலேயே கைவிடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், மைக்கேல் ராயப்பன் கடும் அதிருப்தி அடைந்துள்ளாராம்.  

இதேபோல, வெங்கட் பிரபு, ஞானவேல் ராஜா உள்ளிட்டோரும் கோடிக்கணக்கான ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, காத்திருந்து நொந்து போயுள்ளனர். ஆனாலும், சிம்பு அவர்களின் படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதனால், வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டுவிட்டார்.

இவர்கள் தவிர, மேலும் சிலரும் கோடிக்கணக்கில் சிம்புவிற்கு அட்வான்ஸ் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.

தயாரிப்பாளர்களை ஏமாற்றும் சிம்பு போன்ற நடிகர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க உள்ளதாகவும், அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இதனிடையே பாங்காங்கில் தற்போது பொழுதை கழித்து வரும் சிம்புவை உடனடியாக சென்னை அழைத்துவர ரகசிய ஏற்பாடு நடைபெற்று வருகிறது.