பிரபல மருத்துவமனை தவறான சிகிச்சை! 6வயது சிறுமியின் கால் வெட்டி எடுக்கப்பட்ட பயங்கரம்!

காலில் காயம் அடைந்த சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதில் தனியார் மருத்துவமனை காட்டிய மெத்தனத்தால் அந்தச் சிறுமியின் காலையே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


ஐதராபாத்தில் பி.கே.குடாவைச் சேர்ந்த 6 வயதுச் சிறுமியான அக்‌ஷரா தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, கப்போர்ட் ஒன்று சாய்ந்து விழுந்ததில் அந்தச் சிறுமியின் பெற்றோரான சந்திரசேகர் - பவானி தம்பதியர் தங்கள் குழந்தையை எடுத்துக்கொண்டு நீலிமா மருத்துவமனைக்கு ஓடினர்.

அங்கு சிறுமியின் காயத்துக்கு சிகிச்சை அளித்து காயத்துக்கு கட்டுப் போட்டு அனுப்பப்பட்டது. ஆனால் மறுநாள் சிறுமிக்கு வலி அதிகமானதை அடுத்து அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கல் மருத்துவம் பார்க்க மறுத்துவிட்டனர். 

இதையடுத்து பல்வேறு மருத்துவமனைக்கு சிறுமியை பெற்றோர் எடுத்துச் சென்ற நிலையில் ஒரு மருத்துமனையில் சிறுமிக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட சிகிச்சையில் கிருமித் தொற்று ஏற்பட்டு கால் பாதிக்கபட்டு விட்டதாகவும், காலை எடுக்க வேண்டும் என்றும் கூறி மருத்துவர்கள் காலை எடுத்து விட்டனர் 

இதற்கு நீலிமா மருத்துவமனையில் அளிக்கபட்ட தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறி சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் நீலிமா மருத்துவமனையில் ஆளும் கட்சி எம்.எல்.சி.யான பல்லா ராஜேஸ்வர ரெட்டி பங்குதாரராக இருப்பதால் விசாரணையில் பின்னடைவு ஏற்படக் கூடும் என்று கூறப்படும் நிலையில் பழைய வழக்கு ஒன்றை ஊடகங்கள் ஊதி பெரிதாக்குவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.