விஜயகாந்த் உடல்நிலை எப்படியிருக்கிறது என்று தொலைக்காட்சிகளில் பார்த்து, அவரது ரசிகர்கள் ரத்தக்கண்ணீர் வடித்துவருகிறார்கள்.
கேப்டன் பாட்டுப் பாடுறாராம்! சூப்பர் சிங்கரில் சேர்க்கப்போகிறாரா பிரேமலதா?
எழுந்து நிற்கவும், உட்காரவும் யாராவது ஒருவர் உதவி செய்யவேண்டி இருக்கிறது. அதேபோன்று பேச்சு வரவில்லை.
இந்த நிலையில், அவரை நேரில் பார்த்து நலம் விசாரித்துவந்த தலைவர் சொன்ன தகவல் படி பார்த்தால், விஜயகாந்துக்கு யாரையும் பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால், யாரைப் பார்த்தாலும் கையைப் பிடித்துக்கொண்டு, ‘நல்லா இருக்கீங்களா... சாப்பிட்டீங்களா?‘ என்று மட்டும் கேட்பதற்குப் பழக்கப்படுத்தி இருக்கிறார்கள். அப்போது அவர் பேசுவது அவருக்கே கேட்காது என்ற அளவுக்குத்தான் குரல் இருக்கிறது. ஞாபகசக்தி இல்லாத ஒரு குழந்தை போலவே இருக்கிறார் விஜயகாந்த். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என எதுவுமே தெரியவில்லை என்கிறார்கள்.
ஆனால் நேற்று (26.3.2019) திருச்சியில் நடைபெற்ற தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பிரேமலதா பேசியதைக் கேட்டு, அவரது கட்சி ஊழியர்களே கடுப்பாகியிருக்கிறார்கள். ஏனென்றால், விஜயகாந்த் இப்போது பாட்டு பாடுகிறார், விரைவில் பிரசாரம் செய்வதற்கு வருகிறார் என்று அறிவித்தார் பிரேமலதா. அதாவது விஜயகாந்துக்கு இப்போது ஸ்பீச் தெரபி கொடுக்கப்பட்டு வருகிறதாம். அதனால் விஜயகாந்தின் வாய்ஸ் நன்றாக இம்ப்ரூவ் ஆகிவிட்டது. பாடச்சொன்னால், எம்.ஜி.ஆர். பாட்டை சத்தம் போட்டு பாடுகிறார் என்று சொல்லியிருக்கிறார் பிரேமலதா.
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்க. ஏனுங்க, அவர் என்ன சூப்பர் சிங்கர் போட்டிக்கா போகப்போகிறார், பிரசாரத்துக்குத்தானே, சும்மா அப்படியே கூட்டிட்டு வாங்க... அவர்கிட்டே அடி வாங்க கட்சிக்காரங்க காத்துக்கிடக்காங்க.