ஆட்சியில் பங்கு கேட்போம்..! ராமதாஸ் வழியில் பிரேமலதா கொதிப்பு

நாங்கள் மட்டும்தான் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடித்து, யாரையும் மிரட்டாமல் இருக்கிறோம் என்று சமீபத்தில் நடைபெற்ற தே.மு.தி.க. கூட்டத்தில் பேசினார் பிரேமலதா. இது நேரடியாகவே பா.ம.க.வுடன் மோதுவதாகவே அமைந்திருந்தது.


இந்த நிலையில், ‘அடுத்து வரும் தேர்தலில் எங்கள் கட்சிக்கு போதிய முக்கியத்துவம் தரவேண்டும் என்பதுடன், ஆட்சி அமைக்கும்போது, எங்கள் கட்சிக்கும் பிரதிநிதித்துவம் தரவேண்டும்‘ என்று தெரிவித்துள்ளார் பிரேமலதா. அதாவது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ராஜ்யசபா எம்.பி. தனக்குக் கிடைக்கும் என்று பிரேமலதா ஆர்வத்துடன் காத்திருந்தார். ஆனால், அவரது வேண்டுகோளுக்கு அ.தி.மு.க. தரப்பில் இருந்து எவ்விதமான ரெஸ்பான்ஸும் இல்லை. அதனாலே, இப்படியொரு அதிரடி மூவ் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், அடுத்த சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் கட்சியை கூட்டணியில் சேர்ப்பதா என்பதையே எடப்பாடி யோசித்துவரும் வேளையில், தன்னுடைய தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுள்ளார் பிரேமலதா என்றுதான் சொல்லப்படுகிறது.