வயிற்றில் இருக்கும் குழந்தையை நினைத்து பேரானந்தம்! 12வது வார ஸ்கேனில் தெரியவந்த அதிர்ச்சி! நிலைகுலைந்து போன கர்பபிணி! திடுக் காரணம்!

லண்டன்: கருப்பையில் வளர்வது புற்றுநோய்க்கட்டி என்று தெரியவந்த கர்ப்பிணி பெண் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.


போவிங்டன் பகுதியை சேர்ந்தவர் விக்டோரியா மற்றும் மார்க் ஜோன்ஸ்டன் தம்பதி. இவர்கள் நீண்ட  இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் கர்ப்பம் தரித்தனர். ஏற்கனவே குழந்தைகள் இருந்தாலும், மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்வதை பெரும் மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் கொண்டாடினர். சமூக ஊடகங்களில் பதிவு வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை அவர்கள் பகிர்ந்துகொண்டனர். 

இந்நிலையில், கரு எந்தளவுக்கு உள்ளது என்பது பற்றி தெரிந்துகொள்ளும் விதமாக, கர்ப்பம் தரித்ததன் 12வது வாரத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்தனர். அப்போதுதான், அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆம், அவர்கள் குழந்தை என நினைத்து வந்தது, உண்மையில் புற்றுநோய்க்கட்டி என தெரியவந்தது.  

மிகப்பெரும் அதிர்ச்சி அளித்தாலும், முன்கூட்டியே புற்றுநோய்க்கட்டியை தெரிந்துகொண்டதால், அதனை அறுவை சிகிச்சை செய்து, அகற்ற திட்டமிட்டுள்ளதாக, விக்டோரியா குறிப்பிட்டுள்ளார்.