குழந்தை பிறந்து 14 நாள்! ஆப்பரேஷன் தையலை பிரித்த மறு நிமிட விபரீதம்! தாயில்லாமல் தவிக்கும் பிஞ்சு குழந்தை! காரணம் டாக்டர்?

உசிலம்பட்டியில் குழந்தை பெற்ற 2 வாரத்திற்க்குள்ளாக தாய் பலியான சம்பவம்.பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் கடந்த 18 ஆம் தேதி நிறை மாத கர்ப்பிணியாக இருந்த தீபா குழந்தை பெற்றுள்ளார். அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பெற்ற தீபா, தனது வீட்டிற்க்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் தையில் பிரிக்க கணவர் கார்த்தியுடன் சென்றுள்ளார்.  

இதனை அடுத்து தையில் பிரித்து வீட்டிற்க்கு சென்ற ஒரு சில மணி நேரத்தில் மயங்கி விழுந்த தீபா, அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லபட்டார்.

ஆனால் எதிர்பாராத விதமாக தீபா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது, மேலும் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் நிலை பரிதாபத்திற்க்குள்ளாகியுள்ளது.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.