காட்டுக்குள் கறி விருந்து..! கர்ப்பிணி சடலம்! தகாத உறவு! ஆம்பூரை அதிர வைத்த கொலை!

பாசமாக கறிவிருந்து வைத்து உபசரித்த கர்ப்பிணியை நகைக்காக உறவினர்களே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


திருப்பத்தூர் மாவட்டம் சுட்டகுண்டா பகுதியில் ரேவதி, மகேஸ்வரன் தம்பதி வசித்து வந்தன. மகேஸ்வரன் பெங்களூருவில் வேலை பார்ப்பதால், கர்ப்பிணியான அவரது மனைவி ரேவதி சுட்டகுண்டாவில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் ரேவதி வீட்டிற்கு அவரது உறவினர்கள் சித்ரா மற்றும் செல்வராஜ் வந்துள்ளனர். திருமண வாழ்க்கை மற்றும் கர்ப்பம் குறித்து நலம் விசாரித்துள்ளனர். பின்னர் உறவினர்களுக்கு கறிக்குழம்பு வைத்து விருந்து அளித்துள்ளார் ரேவதி. நன்றாக சாப்பிட்ட இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் ரேவதிக்கு போன் வர சரியாக சிக்னல் கிடைக்கவில்லை என வீட்டில் இருந்து 20 அடி தூரத்திற்கு சென்று பேசியுள்ளார் ரேவதி. ஆனால் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ரேவதியை தேட ஆரம்பித்தனர். ரேவதி அருகில் உள்ள மலையடிவாரத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கடைசியாக ரேவதியின் வீட்டிற்கு வந்த உறவினர்கள் சித்ரா மற்றும் செல்வராஜிடம் தங்களுக்கே உரிய பாணியில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது இருவரும் திருட்டு முழி முழிக்க, போலீஸ் தடி எடுப்பதற்குள் ரேவதியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். ரேவதி அணிந்திருந்த 10 சவரன் நகைக்காக கொலை செய்ததாக போலீசிடம் வாக்குமூலம் அளித்தனர். சிக்னல் கிடைக்கவில்லை என வெளியில் வந்த ரேவதி முகத்தில் துணியைக் கட்டி கடத்தி சென்று கொன்றுவிட்டு நகைகள் திருடியது தெரியவந்தது. இதை அடுத்து நகைகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்