கமல்ஹாசனை ஏமாற்றிய பிரசாந்த் கிஷோர்! அதிர்ச்சியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 5% வாக்குகள் பெற்று, கொஞ்சமாக புருவம் உயர்த்த வைத்தார் கமல்ஹாசன்.


உடனே தன்னுடைய கெத்தைக் காட்டுவதற்காக பிரபல ஐ.டி. டீமான ஐபேக் பிரசாந்த் கிஷோரை வரவழைத்து ஆலோசனை மேற்கொண்டார். கம்ல்ஹாசனை முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு களத்தில் இறங்கிய பிரசாந்த் கிஷோர் டீம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆய்வுகள் நடத்தியதாம். அந்த ஆய்வு முடிவு திருப்திகரமாக இல்லையாம்.

அதாவது, பெண்களிடம் கமல்ஹாசனுக்கு சுத்தமாக மதிப்பே இல்லை. மேலும், அவர் முத்தம் தருவதைத் தவிர எதையும் கற்றுத்தர மாட்டார் என்று மக்கள் நினைக்கிறார்களாம். அதனால், இவரை நம்பி கம்பெனியை களம் இறக்குவது தவறு என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

அதனால், களம் இறங்கியதற்காக சில ஐடியாக்களை மட்டும் கொடுத்துவிட்டு, கமல்ஹாசனை முதல்வராக்க என்னால் முடியாது என்று மூட்டை முடுச்சுகளுடன் கிளம்பிவிட்டாராம். அவர் போனால் போகட்டும், நம்மால் அதைவிட சிறப்பாக செயல்பட முடியும் என்று கமல்ஹாசன் உறுதியாக இருக்கிறார். 

பிரசாந்த்தால் முடியாததை கமல் எப்படி சாதிக்கப் போகிறாரோ..? எப்படியோ கமல் தேற மாட்டார் என்று தைரியமாக சொன்னதற்காக பிரசாந்தை பாராட்டலாம்.