நெசவாளர்கள் வயிற்றில் வெளிப்படையாக அடிக்கும் போத்தீஸ்..! அதிர்ச்சி விளம்பரத்தின் பரபர பின்னணி!

இந்த விளம்பரம் பார்த்து எனக்கு வருத்தமாக இருந்தது..


ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நெசவுத் தொழில் இன்று 80 சதவீதம் அழிந்து விட்டது என்றே கூறலாம். விசைத்தறிகளின் வரவால் நெசவுத் தொழிலை துறந்த குடும்பங்கள் பல. எதிர்கால பயம் கருதி அவர்களின் பிள்ளைகள் வங்கிக் கல்வி கடன் மூலம் படித்து வேறு துறைக்கு வந்தாயிற்று..

இன்னமும் சிலரால் நெசவுத்தொழில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  அவர்களின் வயிற்றில் அடிப்பது போல் இவ்வாசகம் இருப்பது கண்டிக்கத்தக்கது..  கோடி கோடியாய் முதலீடு செய்து வியாபாரம் பார்ப்பவர்கள் சிறு தொழிலாளிகளின் வயிற்றில் அடிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் ..!

இதுகுறித்து சம்மந்தப்பட்ட நிர்வாகத்துடன் பேச வேண்டும். இதுபோன்ற விளம்பரங்கள் தொடர்ந்து இடம்பெற்றால் அவர்கள் யாராக இருந்தாலும் மோசமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டிய நிலை விரைவில் வரும்.

வேதனையுடன்

டி.எஸ்.ஆர்.சுபாஷ்