ஒரே ஒரு பாட்டு ஹிட்..! ஒரு மாநிலத்துக்கு ஒரு ரேட்..! சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய பூஜை நடிகை..! யார் தெரியுமா?

சென்னை: ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு விதமான சம்பளம் வாங்கி வருகிறார் மாஸ்க் பட நடிகை.


தமிழில், முன்னணி நடிகர், இயக்குனர் இயக்கத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த மாஸ்க்கான படத்தில் அறிமுகமானவர் அந்த பூஜை நடிகை. அதற்குப் பின் அவருக்கு தமிழில் வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் மனம் தளராத நடிகை,  தெலுங்கு போன்ற பிறமொழிப் படங்களில் அதிகளவில் நடிக்க தொடங்கினார்.

அதற்கு நல்ல பயனும் கிடைத்தது. அவரது மார்க்கெட்  ரேட் கிறுகிறுவென உச்சத்திற்குச் சென்றது. படங்களும் நல்ல ஹிட் அடித்ததால் அவர் ராசியான நடிகையாக மாறிவிட்டார். தெலுங்கு, இந்தி மொழிகளில் பூஜையான நடிகைக்கு நல்ல வரவேற்பு நிலவுகிறது. 

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு விதமான சம்பளத்தை நிர்ணயித்துள்ளாராம் அந்த நடிகை. தற்சமயம், பாகுபலி ஹீரோ நடிக்கும் புதிய படத்தில் பூஜையான நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். அவரது மார்க்கெட் உச்சத்தை கண்டு வாயை பிளந்த தமிழ் சினிமா இயக்குனர்கள், நடிகர்கள், அவரை எப்படியேனும் தமிழில் நடிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தளபதி நடிகர் புதியதாக நடிக்கும் படத்தில் இந்த நடிகையை  ஒப்பந்தம் செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனராம்.