கமல்ஹாசன் குடும்ப உறுப்பினராக மாறிய பூஜா குமார்! சந்தோஷத்தில் மய்ய நிர்வாகிகள்!

கமல்ஹாசன் ஒரு புதுமை விரும்பி என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.


ரசிகர் மன்றத்தை சேவை செய்ய வைத்தவர், யாரும் எதிர்பார்க்காத நாளில் கட்சி தொடங்கியவர். இரண்டு பெரும் கட்சிகளுக்கு இடையில் நுழைந்து 5 சதவிகிதம் வாக்கு வங்கி பெற்றவர்.

அவரது சொந்த வாழ்க்கையும் ஒரே மாதிரி இல்லாமல் பல்வேறு ஏற்றம் இறக்கம் கொண்டவை. சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிலே அழிக்கும் ஒரே கலைஞன். அதனாலோ என்னவோ, கமல்ஹாசனை கண்டுகொள்ளாமல் ரஜினியை முன்னிருத்தி வருகிறது பா.ஜக.

இன்று கமல்ஹாசனின் 65வது பிறந்த நாள். உண்மையில் இந்த தினத்தை திரையுலகமும், தமிழக அரசும் ஏன் மைய அரசும் சேர்ந்தே கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், அவரது கட்சியினரே கொண்டாடிக்கொள்ளும் சூழல்தான் நிகழ்ந்திருக்கிறது.

இன்று அவரது தந்தையாருக்கு பரமக்குடியில் சிலை திறந்ததை அடுத்து, கமல்ஹாசனின் குடும்பமே ஒன்று சேர்ந்தது. சிலை திறப்புவிழா முடிந்ததும் வழக்கம் போல் குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது குடும்பத்தில் ஒருவராக இடம் பிடித்தார் பூஜா குமார்.

கவுதமி வெளியேறிய பிறகு கமல்ஹாசனை அவர்தான் நன்றாக கவனித்துக்கொள்கிறார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அவரை தன்னுடைய குடும்ப உறுப்பினராகவே அறிமுகம் செய்திருக்கிறார் கமல்ஹாசன். இனி தேவையற்ற கேள்விகள் வராது என்று மய்ய நிர்வாகிகளும் சந்தோஷம் அடைந்திருக்கிறார்கள்.  

கமல் ஒரு புதுமை விரும்பி என்பது உண்மைதான்.