பாகுபலி போன்று இரண்டு பாகமாக தயாராகும் பொன்னியின் செல்வன்..! சுருக்கமான கதை இதோ!

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படம் பற்றி தினந்தோறும் புதுப்புது செய்திகள் வந்தபடியே இருக்கின்றன.


அதில் இப்போது இன்னொரு புதுச்செய்தியும் சேர்ந்திருக்கிறது.ஒரு வழியாக ஜெயமோகனை விட்டு விலகி,மேஜிக் லாண்டர்ன் குழுவுக்காக பொன்னியின் செல்வனை மேடை நாடகமாக்கிய குமரவேலுவுடன் கூட்டணி அமைத்திருக்கும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக தயாரித்து வெளியிடப் போகிறார் என்பதுதான் அந்தச் செய்தி.

காஞ்சியில் இருந்து , ஆதித்த கரிகாலனால் தன் தங்கை குந்தவைக்கு ( நயந்தாரா) ஒரு ரகசிய ஓலை கொடுத்து அனுப்பப் படுகிறான் வந்தியத்தேவன் (கார்த்தி). அவன் பல சாகசங்களுக்குப் பிறகு குந்தவையைச் சந்தித்து காதலில் விழுகிறான்.அவள் வந்தியத்தேவனை இலங்கையில் இருக்கும் தன் தம்பி அருள்மொழி வர்மனிடம் ( ஜெயம் ரவி) அனுப்புகிறாள்.

பூங்குழலியின் ( அமலா பால்) படகில் இலங்கை வந்து சேரும் வந்தியன் பொன்னியின் செல்வனுடன் சேர்ந்து மேலும் சாகசங்கள் செய்து,பழுவேட்டரையர் ( முடிவாகவில்லை) அனுப்பிய படையால் கைது செய்யப்பட்டு கப்பலில் நாகப்பட்டிணம் வரும் வழியில் கடற்கொள்ளை கப்பாலால் தாக்கப்பட்டு,கடலில் மூழ்கி இறந்து போவதாகச் வதந்தி பரவும் வரை முதல் பாகமாக வரவிருக்கிறது.

அதன் பிறகு ஆதித்த கரிகாலன் கொலை,நந்தினி (ஐஸ்வர்யா ராய்) யார் என்கிற மர்மம்,பழுவேட்டரையர் மரணம்,சுந்தர சோழருக்கு அடுத்து பட்டத்துக்கு வருவது யார்,அருள் மொழிவர்மன்,வந்தியத்தேவன் காதல் கதைகள் எல்லாம் இரண்டாம் பாகத்தில் சொல்லப்பட இருக்கிறது.