பொள்ளாச்சி பெண்கள் வீடியோ! சிபிஐ விசாரணையில் வெளியான திடுக் தகவல்! சூடுபிடிக்கும் விசாரணை!

கொடூர சம்பவம் ஒரு பலாத்கார சம்பவங்களின் தொகுப்பு என்று சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.


இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில், சபரிராஜன், திருநாவுக்கரசு, சதிஷ்,  வசந்தகுமார், மணி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் பற்றி சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  

இதன்படி, சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் மீது  பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல், தனிநபர் உரிமையில் தலையீடு, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப் பதிந்தது.  இதன்பேரில், சிபிஐ நேரடி மேற்பார்வையில், ஒரு பெண் இன்ஸ்பெக்டர் வைத்து, வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல, இரண்டாவதாக நடத்தைக் கோளாறு, தெரிந்தே மற்றவர்களுக்கு சேதம் ஏற்படுத்துதல், தவறான உள்நோக்கம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, செந்தில், பாபு, மணி மற்றும் வசந்தகுமார் ஆகியோர்  மீதும் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்நிலையில், ஒரு மாத காலத்திற்குள், சிபிஐ குற்றப்பத்திரிகை தயாரித்து, அதனை நீதிமன்றத்தில சமர்ப்பித்துள்ளது. அதில், சமூக ஊடகங்கள் வழியாக பெண்களை ஆசை வார்த்தை கூறி பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு, பின்னர் அவர்களை தனியிடங்களுக்கு வரவழைத்து, பலாத்காரம் செய்வதையும், அதனை வீடியோ எடுத்து வைத்து மிரட்டுவதையும் இந்த 5 பேர் கும்பல் பழக்கமாக செய்து வந்திருக்கிறார்கள்.

இவர்கள் 4 பேரும் தொடர்ந்து ஃபோனில் பேசியபடி, இந்த குற்றத்தை மனசாட்சி இன்றி தொடர்ந்துள்ளனர். இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுவதாகவும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது. குற்றவாளிகள் 5 பேரும் ஏற்கனவே சிறையில் உள்ளனர். தற்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் பிறப்பிக்கப் போகும் தண்டனை விவரம் எத்தகையது என்று பல தரப்பலும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

முன்னதாக ஐந்து பேரும் இணைந்து ஆசை வார்த்தைகள் கூறி பெண்களுடன் உல்லாசமாக இருந்து அதனை வீடியோ எடுத்து வெளியிட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஐந்து பேரும் சேர்ந்துஅப்பாவி பெண்களை கற்பழித்துள்ளதாக சிபிஐ கூறியுள்ள தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.