எடப்பாடியார் வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் தாயார் திருமதி தவுசாயம்மாள் அவர்கள் அண்மையில் உடல்நலக் குறைவால் காலமானதையொட்டி, நேற்றைய தினம் தமிழக கவர்னர் புரோகித், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பலரும் வந்து எடப்பாடியாருக்கு ஆறுதல் கூறினார்கள்.


இன்றைய தினமும் எடப்பாடியார் இருக்கும் இல்லத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களின் வருகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. திரைப்பட நடிகையும் ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினருமான திருமதி ரோஜா, குஷ்பு, நடிகர் பிரபு ஆகியோர் காலையில் வருகை தந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

முதல்வரின் தாயார் திருமதி தவுசாயம்மாள் அவர்களின் திருவுருவப் படத்திற்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.கே. ரங்கராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ. சௌந்தரராஜன், முன்னாள் மாநிலச் செயலாளர் திரு.ஜி. ராமகிருஷ்ணன்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. ஜான் பாண்டியன், கி.வீரமணி, எல்.கே.சுதீஷ், விக்கிரமராஜா உள்ளிட்ட பலரும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இன்னமும் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.