2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில் போட்டியிட தடை! அளவானது அதிரடி சட்டம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்த மாநில அரசு ஒரு புதிய அமலாக்க கொள்கையை நிறைவேற்றியுள்ளது.


அதில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி ஒரு புதிய சட்ட மசோதா கொண்டு மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.உத்தரகாண்ட் பஞ்சாயத்து மசோதா-2019 என்ற இந்த மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. 

இதன்படி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் உத்தரகாண்ட் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது. என அந்த அமர்வில் தெரிவிக்கப்பட்டது. மற்றும் அதில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு காண வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியையும் இந்த மசோதா மூலம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பெண்களும், தலித் பிரிவு ஆண்களும் 8-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அதேநேரம் தலித் பிரிவு பெண்கள் 5-ம் வகுப்பு முடித்திருந்தாலே போதுமானது. நேற்று நடந்த மாநில சட்டசபை கூட்டத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.