விசாரணையின் போது பெண்ணிடம் தகாத செயல்! நடுரோட்டில் போலீஸ் அதிகாரியை புரட்டியெடுத்த பெண்கள்!

போபால் பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீஸ் அதிகாரியை பொதுமக்கள் புரட்டியெடுத்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


மத்தியப் பிரதேச மாநிலத்தின் சுங்க வரித்துறையில் போலீசாகப் பணிபுரியும் நபர்தான்  இத்தகைய தாக்குதலுக்கு ஆளானவர். சம்பந்தப்பட்ட அதிகாரி உள்ளிட்ட சுங்க வரித்துறை அதிகாரிகள், வீடு ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக துப்பு கிடைத்ததன் பேரில், அங்கு சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, குறிப்பிட்ட அதிகாரி, அங்கிந்த இளம்பெண்ணிடம் விசாரணைக்காக, சற்று எல்லை மீறி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பெண் மற்றும் அவரதுதாயார்  போலீஸ் என்றும் பாராமல் அந்த அதிகாரியை அடித்து உதைத்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக உள்ளூர் மக்களும் சேர்ந்துகொண்டு, போலீசை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  நீண்ட நேரம் போராடிய போலீசார் ஒருவழியாக, பொதுமக்களை சமாளித்து, அந்த அதிகாரியை காப்பாற்றினர்.

இதுதொடர்பாக, 7 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, போலீஸ் அதிகாரி தாக்கப்படும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.