காதலியின் அந்த உறுப்பை கடித்து துப்பிய காதலன்! பதற வைக்கும் காரணம்!

அகமதாபாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தன்னிடம் பேச மறுத்த தன் முன்னாள் காதலியின் அந்த உறுப்பை காதலன் ஒருவர் கடித்து துப்பியுள்ளார்.


அகமதாபாத்தில் உள்ள சந்த்கேதா பகுதியைச் சேர்ந்த மஞ்சு பர்மர் 24 ,இவருக்கும் ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் பகுதியைச் சேர்ந்த கேசவ்லால் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நன்றாக பேசி பழகி வந்த இவர்கள் சில நாட்களுக்கு முன்னர் தங்களுக்குள் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாடு காரணமாக பேசிக்கொள்வதை நிறுத்திவிட்டனர். இதையடுத்து  சில நாட்களுக்கு பிறகு மஞ்சு அந்த பகுதியை விட்டு தனது தங்கையுடன் வேறொரு பகுதிக்கு வேலைக்காக குடிபெயர்ந்தார்.

பின்னர் சிலநாட்கள் சென்ற நிலையில் மஞ்சு வேலை செய்யும் அதே நிறுவனத்தில் கேசவ்லாலின் நண்பரான தினேஷ் வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து மஞ்சு அங்கு வேலை பார்ப்பதை தினேஷ் தனது நண்பரான கேசவ்லாலுக்கு தெரிவித்துள்ளார். தனது காதலி இரண்டு ஆண்டுகளாக தன்னிடம் பேசாததால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் அவரை பழிவாங்க நினைத்தார். இதனையடுத்து மஞ்சு பொருள்கள் வாங்க கடைவீதிக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த கேசவ்லால் மஞ்சுவிடம் பேச ஆரம்பித்தார்.

பின்னர் மஞ்சு அவரிடம் பேச மறுத்து உள்ளார் இதனால் ஆத்திரமடைந்த அவர் அவளது மூக்கை பாய்ந்து கடித்து துப்பியுள்ளார். மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகம் வந்ததால் அருகில் இருந்தவர்கள் அவளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறைக்கு செய்தி தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கேசவ்லால் மீது எப்ஐஆர் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.