பட்டப்பகலில் இளைஞனின் புத்தம் புது பைக்கை அடித்து நொறுக்கிய போலீஸ்! வைரல் வீடியோ!

சென்னை போர் நினைவுச் சின்னம் அருகே சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்ட கல்லூரி மாணவனின் இருச் சக்கர வாகனத்தை காவலர் லத்தியால் தாக்கிய வீடியோ வைரல்


சென்னை கோட்டை அடுத்துள்ள போர் நினைவுச் சின்னம் எதிரில் சாலையோரமாக நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனம் ஒன்றை ரோந்து போலீஸ் வாகனத்தில் வந்த போலீஸ்காரர் ஒருவர் கம்பால் அடித்து உடைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த காட்சியில் கோட்டை போலீஸ் நிலைய ரோந்து வாகனம் வந்து நின்றது. சாலையோரமாக நின்றிருந்த இரு சக்கர வாகனத்தை ரோந்து வாகனத்தில் இருந்து இறங்கிய போலீஸ்காரர் ஒருவர் பெரிய கம்பால் அடித்து நொறுக்குகிறார். அப்போது உடன் உதவி ஆய்வாளரும் இருக்கிறார். பைக்கின் உரிமையாளர் ஓடி வந்து பைக்கை எடுத்து செல்கிறார். போலீசுக்கு எந்த வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இவை அனைத்தும் அந்த காட்சியில் இருக்கிறது. 

இது தொடர்பாக கோட்டை போலீசிடம் கேட்டபோது, "அந்த பைக்கை ஓட்டி வந்தவர் கல்லூரி மாணவன். சத்யா நகரில் கஞ்சா கிடைக்கும் என்ற எண்ணத்தில் வந்துள்ளார். பல வழிகளில் அங்கேயே சுற்றி கொண்டிருந்தார். கண்டித்தோம் கேட்காததால் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். இதனால் பைக்கை அடித்து விட்டு விரட்டி விட்டதாக" கூறினர்.