பொள்ளாச்சியில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ரகசிய விருந்து! போதை மாத்திரையுடன் சிக்கிய 150 பேர்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரிசார்ட் ஒன்றில் ரகசியமாக கூடி போதை மாத்திரையுடன் மது விருந்து நடத்திய 150 பேர் சிக்கியுள்ளனர்.


கோவை சுற்றுவட்டாரங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வெளிமாநில மாணவர்கள் ஏராளமானவர்கள் பயின்று வருகின்றனர். இவர்கள் டேட்டிங் ஆப் மற்றும் டேட்டிங் இணையதளம் மூலமாக பொள்ளாச்சியில் ஒரு மது விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

குறிப்பாக ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் மிக்க இளைஞர்களாக இந்த ஏற்பாட்டிற்கு தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிறகு பொள்ளாச்சி சேத்துமடையில் உள்ள அக்ரி நெஸ்ட் என்ற ரிசார்ட்டை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.

திட்டமிட்டபடி நேற்றிரவு கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. சொகுசு கார்கள், விலை உயர்ந்த பைக்குகளில் வந்த  நூற்றுக்கும் மேற்பட்டோர் மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போதை மாத்திரைகள், மருந்துகளை அவர்கள் உட்கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் போதை தலைக்கேறி அவர்கள் ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் சென்றதும் போலீசார் அங்கு சென்று அனைவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஓரினச்சேர்க்கை ஆர்வத்தில் அவர்கள் வந்தனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.