பெரியார் சிலையை உடைச்சது பா.ம.க.வா..? அதனால்தான் கூவினாரா ராமதாஸ்..?

ரஜினிகாந்த் பெரியாருக்கு எதிராகப் பேசி கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகிவிட்டது. இப்போதுதான் அடுத்த உலகத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர் போன்று, திடீரென ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.


அதாவது ரஜினி பெரியாரைப் பற்றி பேசாமலே இருந்திருக்கலாம் என்று தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார். ரஜினி பெரியாரை விமர்சனம் செய்ததும் காஞ்சிபுரம் அருகே பெரியாரின் சிலை ஒன்று துண்டாடப்பட்டது. 

சிலை உடைப்பு குறித்துப் பேசிய டாக்டர் ராமதாஸ், “தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை செய்த கயவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடுமையான நடவடிக்கை பெற்றுத் தர வேண்டும். பெரியாரின் கொள்கைகளில் மாற்றுக்கருத்து இருந்தால், அதை கொள்கைகள் மூலமாகத்தான் எதிர்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்து இருந்தார்.

இத்தனை நாட்கள் கழித்து திடீரென ராமதாஸ் வான்டடாக வந்து வண்டியில் ஏறுகிறாரே ஏன் என்று விசாரித்தால்தான் உண்மையான தகவல் வெளியே வருகிறது. ஆம், அந்த பெரியார் சிலையை உடைத்ததே பா.ம.க. ஆள்தானாம்.

இந்த விவகாரத்தில் தன்னுடைய தலை உருண்டுவிடக் கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே அறிக்கை வெளியிடுகிறாராம் ராமதாஸ். உஷாரய்யா உஷாரு.