பெண்கள் கழிப்பறைக்குள் சென்ற திருநங்கை! காத்திருந்த அதிர்ச்சி! பிறகு அரங்கேறிய அவலம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பொதுகழிப்பறைக்குள் சென்ற இளம் திருநங்கையை அங்கு துப்புரவு பணி செய்து கொண்டிருந்த பெண் அடித்து வெளியே துரத்தி உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு கிரிட்சென் என்ற திருநங்கை வந்துள்ளார். அங்கு தனது வேலைகளை முடித்துக்கொண்டு கழிப்பறைக்குச் சென்றுள்ளார். அப்போது கிரிட்சென் பெண்கள் கழிவறைக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு துப்புரவு பணி மேற்கொண்டு வந்த ஒரு பெண் 'நீ ஒரு திருநங்கை உனக்கு ஆண் உறுப்பு உள்ளது.நீ ஏன் பெண்கள் கழிவறைக்கு வந்தாய்' என திட்டியுள்ளார்.

இதனிடையே இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது இந்நிலையில் இருவரும் சண்டையிட்டனர். இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து கிரிட்செனை கைது செய்தனர். அப்போது இரவு 11.30 மணி இந்நிலையில் அவரை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவர் மீது எந்தப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வது என காவல்துறையினர் குழம்பியுள்ளனர். பின்னர் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவானது வெளியானதில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்துள்ளனர். 

இதையடுத்து துப்புறவு பணியை மேற்கொண்ட பெண் தான் கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக்கொள்வதாக காவல் நிலையத்திற்கு வந்து தெரிவித்துள்ளார். புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் கிரிட்செனிடம் மன்னிப்பு கேட்டு ஒரு கடிதமும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானா கிரிட்சென் இந்த நடத்தை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.எந்த ஒரு தவறும் செய்யாத திருநங்கையை இந்த மாதிரியாக துன்புறுத்துவது சமுதாயத்திற்கு புறமான குற்றமாகும் எனவும் தங்களது பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.