தூத்துக்குடி , திருச்செந்தூரில் வரும் 1ஆம் தேதியில் இருந்து ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்கிற்கு வந்தால் பெட்ரோல் போடப்படமாட்டாது என்ற அறிவிப்பு பொது மக்களிடத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஹெல்மெட் அணிந்து வந்தால் தான் இனி பெட்ரோல்! பங்குகள் அதிரடி அறிவிப்புஸ
திருச்செந்தூர், குலசேகரன்பட்டணம், ஆறுமுகநேரி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் இந்த மாற்று சிந்தனையை அமல்படுத்தவுள்ளனர், இந்நிலையில் சாலையில் விபத்துகள் குறைப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வழக்கம் போல திருச்செந்தூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் நடைபெற்றது
அதில் கலந்து கொண்டு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய பின்னர் பேசிய தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா: சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை குறைக்கவே பெட்ரோல் உரிமையாளர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து இந்த முயற்சியை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
பெட்ரோல் பங்குகளுக்கு இனி ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் கொடுக்கப்படாது. இந்த முடிவை திருச்செந்தூரில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் ஏற்றுக் கொண்டுவிட்டன. இதனை வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டும். ஹெல்மெட் அணியாமல் வந்து பிரச்சனை செய்தால் அவர்கள் மீது பெட்ரோல் பங்கு பணியாளர்கள் புகார் அளிக்கலாம்.
ஹெல்மெட் அணிந்து வந்து பிரச்சனை இல்லாமல் பெட்ரோல் வாங்கிச் செல்ல வேண்டும். பிரச்சனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முரளி ரம்பா கூறியுள்ளார்.