என்னை தாண்டி தொடுடா பார்க்கலாம் ! எஜமானியை சுற்றி வளைத்த கரடிகளிடம் மாஸ் காட்டிய செல்ல பிராணிகள்!

பெண்ணை தாக்க வந்த கரடிகளை தெறித்து ஓட வைத்த செல்ல பிராணிகள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார்கள்.


அல்பர்டாபில் உள்ள ஒரு வீட்டின் முன்பக்கமாக கார்டனில் இருந்த செடிகளுக்கு தண்ணீர் விட்டு வந்த்க இளம்பெண்ணை மறைந்து இருந்த கரடி ஒன்று தாக்க முயற்சித்தபோது,

சுதாரித்துக்கொண்ட இளம் பெண் வீட்டிற்க்குள் ஓட்டம் பிடித்தார், மேலும் வாசலில் அப்பாவியாக நின்று கொண்டிருந்த வளர்ப்பு செல்ல பிராணிகளான நாய்களை எங்கே கரடிகள் கடித்து தின்றுவிடுமோ என்ற பயத்தில்,

வீட்டிற்கு உள்ளாக அழைத்த போதும் தனது எஜமானிக்காக, கரடிகளை மிரட்ட, விடாது குளைத்த படி கரடிகளை விரட்ட முன்னேறி சென்ற நாய்க்குட்டிகள் மாஸ் காட்டியுள்ளது.

இதற்கிடையில் , இளம் பெண் துப்பாக்கி எடுத்து வானம் நோக்கி சுட்டு, அந்த கரடிகளை விரட்டியுள்ளார், மீண்டும் சிறிது நேரத்தில் திரும்ப வந்த கரடிகளை வனத்துறையினர் அப்புறபடுத்தி வனப்பகுதிகுள்ளாக பத்திரமாக கொண்டு விட்டனர்.

எஜமானி மீதான அன்பில் ,தனது உயிரையும் பெரிதாக நினைக்காது இரண்டு நாய்க்குட்டிகளும் செய்த செயலை நெட்டிசன்கள் மாஸாக ட்ரெண்டாக்கி வருகின்றனர்..