பூச்சிக் கொல்லியும் இல்லை, தடையும் இல்லை..! ஆச்சி மசாலா விளக்கம்!

ஆச்சி மிளகாய் தூளில் பூச்சிக் கொல்லி சேர்த்திருப்பதால் அதனை விற்பனை செய்ய கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அந்நிறுவனம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.


அதில் முன்னணியில் இருப்பது ஆச்சி மசாலா கம்பெனி. இது தமிழகத்தை தலைமை இடமாகக் கொண்ட கம்பெனியாக இருந்தாலும், இப்போது பக்கத்து மாநில சந்தைகளிலும் செல்வாக்குச் செலுத்தி வருகிறது. சமீபாத்தில் அதன் முதலாளியே அதன் விளம்பரப் படத்தில் நடித்து 'ஆச்சி மசாலா ஒன்றே வைராக்கியம்' என்று பாட்டுபாடிய விளம்பரம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல கேரளத்திலும் பிரபலமானது.

இந்த நிலையில் கேரளமாநிலம் திருச்சூரில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அங்கு ஒரு கடையில் இருந்த ஆச்சி மசாலா கம்பெனி தயாரிப்புகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றி கொச்சியில் உள்ள உணவுப்பொருள் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நடந்த ஆய்வில்,ஆச்சி மசாலா பொடி நிறுவனத்தின் மிளகாய் பொடியில் , பூச்சிக்கொல்லி மருந்துகளான 'இட்டியோன்,புரபேனாபோஸ்' ஆகியவற்றின் அளவு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த அறிக்கையின் அடிப்படையில் ,இந்த மிளகாய்ப் பொடிக்கு தடைவிதித்து கேரள உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்து ஆச்சி மசாலா அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.