பேரறிவாளன் மிக நெருக்கமாக புகைப்படம் எடுத்துக் கொண்ட இளம் பெண்! யார் தெரியுமா?

பரோலில் வந்துள்ள பேரறிவாளன் தனது சகோதரி மகள் திருமணத்தில் உற்சாகமாக கலந்து கொண்டார், அங்கு வந்திருந்த இளம் பெண் ஒருவருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


இந்த திருமண விழாவில் ஏராளமான சினிமா பிரபலங்கள், செய்தித்துறை வல்லுனர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பனிமலரும் ஒருவர். இவர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். நீண்ட நெடும் காலமாக பேரறிவாளன் விடுதலைக்காக பனிமலர் குரல் கொடுத்து வருகிறார்.

பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மமாளுக்கும் பனிமலர் மிகவும் நெருக்கம். தன்னுடைய தாயை போல அற்புதம் அம்மாளை பனிமலர் கவனித்து வருகிறார். இந்த அடிப்படையில் திருமண விழாவிற்கு சென்ற பனிமலர் முதல் முறையாக சிறைக்கு வெளியே பேரறிவாளனை பார்த்தார். இந்த மகிழ்ச்சியில் அவரை கட்டி அணைத்தார்.

சகோதர பாசத்துடன் பேரறிவாளனும் பனிமலரை கட்டி அணைத்தார். இந்த புகைப்படம் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த நெருக்கமான புகைப்படத்திற்கு பலரும் கண் காது மூக்கு வைத்து பேச ஆரம்பித்துவிட்டனர். ஆனால் பேரறிவாளன் தனக்கு சகோதரர் போன்றவர் என பனிமலர் கூறி வருகிறார்.