தலித் MLA நின்ற இடத்தில் மாட்டு மூத்திரம் தெளித்த கொடூரம்! தீட்டு கழிச்சாங்களாம்! செஞ்சது யாரு தெரியுமா?

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில்தான் இந்தக் கேவலம் அரங்கேறி இருக்கிறது.


சி.பி.ஐயின் நாட்டிகா தொகுதி எம்.எல்.ஏ கீதா கோபி. இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்.சாலை வசதிகளை மேம்படுத்தக் கேட்டு பொதுப்பணி துறை அலுவல வாசலில் தர்னா போராட்டம் நடத்தி இருக்கிறார்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னதும் கீதா கோபி தர்னாவை கைவிட்டு  அங்கிருந்து சென்றுவிட்டார்.

அவர் புறப்பட்டு போனதும் அங்கு வந்து இறங்கிய காங்கிரஸ் இளைஞர் அணி கீதா கோபி மக்களை ஏமாற்றுகிறார் என்று சொன்னதுடம் மாட்டு சிறுநீருடன் தண்ணீர் கலந்து கீதா நின்ற இடத்தில் தெளித்து இருக்கிறார்கள். கேரள மாநில கலாச்சார துறை அமைச்சர் ஏ.கே பாலன் இதுபற்றி பேசும்போது, கூறியதாவது.

இது போன்ற செயல்களை இதுவரை வடஇந்தியாவில்தான் பார்த்திருக்கிறோம்,இது இங்கும் பரவிட்டது என்றார். சட்டமன்ற உறுப்பினர் கீதா கோபி ,செர்பூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்திருக்கிறார்.. எஃ.ஐ ஆர் போடப்பட்டு இருக்கிறது.