ஆபிஸ் வேலையாக சென்ற இடத்தில் முன் பின் தெரியாத பெண்ணுடன் செக்ஸ்! அப்போது அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

பாரிஸ் ஆபிஸ் வேலையாக பயணம் சென்ற நபர், செக்ஸ் வைத்துக் கொண்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் எம் சேவியர். இவர், டிஎஸ்ஓ எனப்படும் ரயில்வே  கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தார். கடந்த 2013ம் ஆண்டு லாய்ரட் என்ற பகுதிக்கு அலுவலக வேலையாக அவர் பயணம் மேற்கொண்டார். அங்கு முன்பின் தெரியாத ஒரு பெண்ணுடன் அவர் செக்ஸ் வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சேவியர் உயிரிழந்தார். 

இந்த விவகாரத்தில் அவருக்கு உரிய இழப்பீடு வழங்க, அவரது நிறுவனம் மறுத்துவிட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் இதுபற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த பாரிஸ் நீதிமன்றம் இது வேலைநேரத்தில் நிகழ்ந்த விபத்து என்பதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தற்போது உத்தரவிட்டுள்ளது.  

 இந்த தீர்ப்பின் விவரத்தை, சேவியரின் வழக்கறிஞர், சாரா பாலட், லிங்க்ட் இன் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அதேசமயம், தரப்பட்ட வேலையை செய்யாமல், உரிய ஓட்டலில் தங்காமல், வேறு ஒரு ஓட்டலுக்குச் சென்று செக்ஸ் செய்து, உயிரிழந்த சேவியருக்கு எப்படி நஷ்ட ஈடு வழங்குவது என, அவரது நிறுவனத்தின் தரப்பில் கடுமையாக வாதிடப்பட்டது.

நிறுவனத்தின் நலனை மறந்து, சுயநலனை கருத்தில்கொண்டு செயல்பட்ட நபரை ஆதரிக்க முடியாது என்றும், அந்நிறுவனத்தின் வழக்கறிஞர் கண்டனம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.