என் மகள் உடம்பு பூரா காயம்! அந்த படுபாவி ஏதோ செஞ்சுட்டான்! கதறிய தாய்! பதறிய கிராமம்!

கரூர் மாவட்டம் காட்டுமுன்னுரை அடுத்த காளி பாளையம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் ஆதி ரெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 29 வயது மதிக்கத்தக்க ஜீவானந்தம் என்ற மகன் இருக்கிறார்.


இவர் தென்னிலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சென்ற ஆண்டு கரூர் பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவருக்கும் ஜீவானந்தத்திற்கு திருமணம் நடைபெற்றது . 

இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன் அனிதா திடீரென  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட அதிர்ச்சியில் பதறியடித்து மகளைக் காண பெற்றோர்கள் விரைந்து சென்றனர். இந்நிலையில் மகளின் உடலை கண்டதும் செய்வதறியாது மகளை கட்டியணைத்து கதறி அழுதனர்.

அதன் பின் மகளின் உடலில் காயம் இருப்பதை கண்ட அனிதாவின் தந்தை உறவினர்களுடன் பரமத்தி காவல் நிலையத்திற்கு சென்று தனது மகள் மரணத்தில் மர்மம் உள்ளதாக புகார் அளித்தார்.

திருமணம் நடந்து முடிந்து ஒரு வருடத்திற்குள்ளேயே பெண் தற்கொலை செய்துள்ளதால், இவ்வழக்கை வருவாய் கோட்டாட்சியர் விசாரித்து வந்தனர். விசாரணை நடைபெற்று வந்த வேளையில், இரு தரப்பு குடும்பத்தினரிடையே நேரடி  விசாரணை மேற்கொள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருமாறு  இருதரப்பு குடும்பத்தினரும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் அனிதாவின் பெற்றோர்களும் உறவினர்களும் முன்கூட்டியே கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜீவானந்தம் குடும்பத்தினர் வருகைக்காக காத்திருந்தனர். 

இதையடுத்து ஜீவானந்தமும் அவரது அம்மா லட்சுமியும் விசாரணைக்காக காரில் அங்கு வந்தனர். அதைக் கண்டு ஆத்திரமடைந்த அனிதாவின் உறவினர்களும் பெற்றோர்களும் அவர்களது காரை அடித்து நொறுக்கினர். அதன்பின் வரதட்சணைக்காக தனது மகளை கொடுமைப்படுத்தி இவர்கள் இரண்டு பேரும் தான் கொன்று உள்ளார்கள் என்று குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதன் பின் நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை சமாதானம் செய்த காவல்துறையினர் ஜீவானந்தத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.