காலையிலயே போன் போடுறானுங்க! அரசியலை விட்டு விலகிய பப்பிமா தீபா சொன்ன பகீர் காரணம்!

ஜெயலலிதா இறந்ததும் தமிழக மக்களிடம் இருந்த சோகத்தை போக்குவதில் பெரும் பங்கு வகித்தவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா.


அவர், அவரது கார் டிரைவர் ராஜா, கணவர் மாதவன் என ஆளுக்கொரு கட்சி தொடங்கி தமிழகத்தை அதிர வைத்தனர். இந்த விவகாரத்தில் எப்படியோ அவர்களுக்குள் ஒரு கருத்துரு ஏற்பட்டது. அதன்படி இப்போது தீபா பேரவை மட்டும் செயல்பட்டு வருகிறது. அந்த தீபா பேரவையையும் இழுத்து மூடுவதாக தீபா அறிவித்திருப்பது, தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சம்பத் என்பவரை தனது அமைப்பில் இருந்து நீக்கினார் தீபா. இந்த விவகாரத்தில் கோபமான சம்பத் ஆற்றிய எதிர்வினை, தீபாவை பாடாக படுத்திவிட்டது என்றும், அதனால்தான் அமைப்பை இழுத்து மூடிவிட்டார் என்றும் தெரிவித்தனர்.

ஆனால், இங்கே தீபாவுக்கு மரியாதை இல்லை, எல்லோரும் கேலியும் கிண்டலுமாகப் பார்ப்பதால் வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டில் செட்டில் ஆகும் முடிவுக்கு வந்திருக்கிறார். இங்கே இருக்கும் அத்தனை சொத்துக்களுடன் கிளம்பிச் செல்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. எப்படியாக இருந்தாலும் சோகம், தமிழக மக்களுக்குத்தான். நீங்க நல்லா இருங்க தீபா.

இதில் வேடிக்கை என்ன என்றால் காலையிலே போன் பண்றாங்க கட்சிக்காரங்க, அது எப்படி சரியாக இருக்கும் என்கிறார். இது போன்ற தொல்லைகள் வேண்டாம் என்று தான் இப்படி ஒரு முடிவெடுத்ததாகவும் பப்பிமா தெரிவித்துள்ளார்.