ஒற்றைத் தலைமைக்கு ஆசைப்படும் பன்னீர் செல்வம்! எடப்பாடி நோட் திஸ் பாயின்ட் ப்ளீஸ்!

சமீபத்தில் தொலைக்காட்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறுதியான பேச்சு, அ.தி.மு.க.வினரை அலற வைத்திருக்கிறது.


ஏனென்றால், அ.தி.மு.க.வில் நாலைந்து மாதங்களாகத்தான் எந்த பிரச்னையும் இல்லை. அதற்கு சிக்கல் உருவாக்குவது போன்று பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ்.எந்த ஒரு கட்சிக்கும் ஒரு தலைவர் இருப்பதுதானே சிறப்பு என்று கேட்கப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ளார் ஓ.பி.எஸ். அது மட்டுமின்றி, விரைவில் அ.தி.மு.க.வில் அப்படி ஒரு மாற்றம் வரும் என்பதையும் உறுதிபடக் கூறியிருக்கிறார்.

மேலும், அ.தி.மு.க. குறித்து அதிகாரபூர்வ கருத்துக்களை கூறுவதற்கு தன்னுடைய மகன் ரவீந்திரநாத்துக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்றும், அவர் கூறுவதுதான் அ.தி.மு.க.வின் கருத்து என்றும் கூறியதும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இவர்தான் பா.ஜ.க.வின் சாய்ஸ் என்று நம்பப்படுவதால், விரைவில் அ.தி.மு.க.வில் இன்னொரு தர்மயுத்தம் நடக்கப்போகிறதோ என்னவோ..? எடப்பாடியார் இப்போதே உஷாராக இருந்துகொள்வது நல்லது.