மாயமான சிறுவன்..! 5 மணி நேரத்தில் கண்டுபிடித்த பள்ளிக்கரணை போலீஸ்! குவியும் பாராட்டு!

காணாமல்போன சிறுவனை புகார் கொடுத்த 5 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்த மவுண்ட் சரக எல்லைக்குட்பட்ட பள்ளிக்கரணை காவல்துறையினருக்கு மக்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.


பெரும்பாக்கம் 8 மாடியில் பிளாக் - 22 வீட்டு எண் - 57 ல் வாசிக்கும் சு.சுஜிதா க/ பெ சுரேஷ் இவர்களின் மகன் நடராஜ் ( எ) சஞ்சய் வயது 13 என்பவர் பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் உள்ள பள்ளியில ஏழாம் வகுப்பு படித்து வருகிறார் இவர் கடந்த 18.01.2020 சனிக்கிழமை 12.10 மணிக்கு வீட்டிலிருந்து கீழே இறங்கி வந்தவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்று இன்று 20.01.2020 இது சம்பந்தமாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திரு.அழகு அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது ஆறுதல் கூறினார். இந்நிலையில் திரு.ஞானசேகரன் காவல் நிலைய எழுத்தர் சிறுவனின் பெற்றோர்களிடம் சமூக ஆர்வலர் சு.ராமச்சந்திரனை போய் பாருங்கள் அவர் அங்குள்ள பகுதிகளில் தன்னார்வலர்களைக் கொண்டு மற்றும் பத்திரிகை உதவியை நாடி அவரும் முயற்சிப்பார் என்று கூறி அவரது செல்போன் நம்பரை கொடுத்து அனுப்பியுள்ளார்.

சிறுவனின் பெற்றோர்கள் சமூக ஆர்வலரை அணுகினார்கள் அவரும் அவர் பங்கிற்க்கு விவரங்களை கேட்டறிந்து முகநூல், வாட்ஸ்அப், ஹலோ, மற்றும் பத்திரிகை நண்பர்கலுக்கு தகவல்களை பரப்பி முயற்சித்தார். இது சம்பந்தமாக மவுண்ட் காவல்துறை துணை ஆணையர் உயர்திரு. டாக்டர்.பிரபாகர் IPS.

அவர்களின் உத்தரவின் பேரில், மடிப்பாக்கம் உதவி ஆணையர் மேற்பார்வையில் பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் திரு. அழகு, மற்றும் உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவலர்களின் கடும் முயற்சியால் புகாரைப் பெற்ற 5- மணி நேரத்தில் காணாமல் போன சிறுவனை புலியந்தோப்பில் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து ஆலோசனை வழங்கி பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

இது சம்பந்தமாக பள்ளிக்கரணை காவல்துறை அதிகாரிகளை சிறுவனின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். விரைவான நடவடிக்கை எடுத்து கண்டுபிடித்து கொடுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நெகிழ்ந்து போய் நன்றி தெரிவித்தனர்.