திருமணச் சந்தை! சீன இளைஞர்களுக்காக சுடச்சுட விற்பனையாகும் கிறிஸ்தவ பெண்கள்!

சீனாவைச்சேர்ந்தவர்கள் பாகிஸ்தானில் ஏழைக் கிறிஸ்தவக் குடும்பத்துப் பெண்களைக் குறிவைத்து கை நிறைய பணம் கொடுத்து அவர்களை திருமணம் செய்துகொண்டு சீனாவுக்கு அழைத்துச் செல்வது அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.


கடந்த் 6 மாதங்களுக்கு முன் பாகிஸ்தானின் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 16 வயதுப் பெண்ணின் பெற்றோருக்கு லட்சக் கணக்கான டாலர்களைக் கொடுத்து அந்தப்பெண்ணை திருமணம் செய்துகொண்ட சீன நபர், சீனாவுக்கு அழைத்துச்  சென்ற நிலையில் 6 மாதத்தில் வயிற்றில் குழந்தையுடன் தாய் விட்டுக்கு திரும்பி வந்தார். தனது கணவன் தன்னை கொடுமைப்படுத்தியதாக வழக்கும்தொடர்ந்துள்ளார். 

பாகிஸ்தானில் உள்ள ஏழைப் பெண்களை திருமணம் செய்து சீனாவைச் சேர்ந்தவர்கள் அழைத்துச் செல்வதை தடுக்க சீன அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றும், விசா கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என பாகிஸ்தான் மனித உரிமை மற்றும் சிறுபான்மையினர் நலத்துற அமைச்சர் அஸ்லம் அகஸ்டின் குற்றம்சாட்டியுள்ள நிலையில் அதனை மறுத்துள்ள சீனா தாங்கள் நாடு கடந்த திருமண உறவுகளை ஊக்குவிக்கவில்லை என தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் கடத்தலில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு  தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் இது தொடர்பாக சீனாவைச் சேர்ந்த 8 பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்த கடத்தல் காரர்கள் 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதாக சீனாவும் உறுதி  அளித்துள்ளது. 

இந்த அளவிற்கு சீனா நடவடிக்கையை தீவிரப்படுத்த காரணம் லாகூர் போன்ற பகுதிகளில் திருமணச் சந்தை என்றே ஒன்றை புரோக்கர்கள் நடத்துகின்றனர். இங்கு வரும் கோடீஸ்வர சீன இளைஞர்கள் தங்களுக்கு பிடித்தமான கிறிஸ்தவ பெண்களை கேட்கும் தொகையை கொடுத்து திருமணம் செய்து அழைத்துச் செல்கின்றனர்.

சிலர் சீனாவில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாலும் பலரும் பாலியல் அடிமைகளாகவே அந்நாட்டவர்களால் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் சிலர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.