ஓடும் ரயிலில் பயங்கர தீ..! 65 பேர் பலி! கேஸ் அடுப்பை பற்ற வைத்து பிரியாணி சமைத்ததால் விபரீதம்!

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலில் பயணி ஒருவர் செய்த காரியத்தால் அடுத்தடுத்து மூன்று பெட்டிகள் தீப்பிடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


பாகிஸ்தானில் கராச்சி ரயில் நிலையத்தில் இருந்து ராவல்பிண்டி வரை செல்லும் பயணிகள் ரயில் இன்று அதிகாலை புறப்பட்டது. அதில் ஒருவர் தான் வைத்திருந்த கேஸ் அடுப்பு ஒன்றை எடுத்து வைத்து சமைக்க துவங்கியுள்ளார்.  

அப்போது கேஸ் அடுப்பில் இருந்து திடீரென தீ ரயில் பெட்டியில் பரவியது. தீயானது அடுத்தடுத்து 3 ரயில் பெட்டிகளை எரித்து நாசமாக்கியது. 

இச்சம்பவம் அறிந்த ரயில் தீயணைப்பு மீட்பு படையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்டனர். முதலில் தீயில் கருகி 16 பேர் உயிரிழந்தனர். பலர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.  

ஆனால், தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உள்ளது. 

இந்த சோகமான சம்பவத்தினால் அப்பகுதி வழியே செல்லும் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எரிந்து நாசமாகி ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.