அபிநந்தனை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கிறது பாகிஸ்தான்! புதிய திருப்பம்!

இந்திய போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் அரசு சர்வதேச செஞ்சிலுவை சங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளார்.


தற்போது ராவல் பிண்டி ராணுவ முகாமில் அபிநந்தன் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவரை ராவல்பிண்டியில் இருந்து ராணுவ விமானம் மூலம் லாகூருக்கு அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் அழைத்து வர உள்ளனர்.

பின்னர் லாகூரில் பிற்பகலில் அபிநந்தனை பாகிஸ்தான் அதிகாரிகள் சர்வதேச செஞ்சிலுவை சங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். அபிநந்தனை செஞ்சிலவை சங்க அதிகாரிகள் முதலில் பெற்றுக் கொள்வர்.

பின்னர் ஜெனிவா ஒப்பந்தப்படி அபிநந்தனிடம் அவர்கள் விசாரிப்பர். ராணுவ சிறை பிடிப்பின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதா என்று அவரிடம் கேட்பர். அதற்கு அவர் பதில் அளித்த பிறகு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.

தொடர்ந்து அபிநந்தனை பாகிஸ்தான் அதிகாரிகள் மேற்பார்வையில் சர்வதேச செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கு அழைத்து வருவார்கள். அங்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் அபிநந்தனை பெற்றுக் கொள்வார்கள்.

அபிநந்தனை அழைத்து வருவதற்கான விமானப்படை உயர்அதிகாரிகள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்தின் வாகா எல்லைக்கு செல்கின்றனர்.