திருமணத்திற்கு பிறகு நடிப்பு! பகல் நிலவு சக்தி எடுத்துள்ள முடிவு! கணவன் வெளியிட்டுள்ள தகவல்!

வெள்ளித்திரை காட்டிலும் சமீப காலமாக சின்னத்திரை சீரியல் நடிகர்கள் அதிக ரசிகர் பட்டாளத்தை தங்கள் வசம் கொண்டுள்ளனர்.


அதிலும் அவர்கள் நடிக்கும் சீரியல் நடிகையையே காதலித்து திருமணம் செய்து கொள்வத.வழக்கமாக ஆன நிலையில் தான், பிரபல தொலைக்காட்சி யில் ஒளிப்பரப்பாகி பெரிய வரவேற்பைப் பெற்ற சீரியல் தான் '' பகல் நிலவு'' அதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அன்வர் - சமீரா இருவருக்கும் சமீபத்தில் ,

திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் அன்வர் மற்றும் சமீரா பத்திரிக்கை ஒன்றிற்க்கு பேட்டி அளித்துள்ளனர், அதில் மிக வெளிப்படையான கேள்விகளுக்கு , தயங்காமல் பதில் அளித்துள்ளனர்.

அந்த வகையில் சமீரா திருமணத்திற்கு பின்னர் நடிக்கமாட்டாரா என கேள்வி எழ, அதற்க்கு பதில் அளித்த அன்வர், இருவரும் முழு மனதாக திருமணத்திற்க்கு முன்பே ஒரு முடிவு எடுத்து விட்டோம்.

அதன்படி, அவரவர் நடிப்பு குறித்த முடிவுகள் தனிப்பட்டவை எனவும் அதற்க்கான முக்கியத்துவம் தனிப்பட்டது எனவே அவரை நான் கட்டுபடுத்த வில்லை மேலும் இது குறித்து சமீரா தான் உறுதி படுத்துவார் எனவும் ஓபனாக பேசியுள்ளார்.