பாவம் கூலி வேலை செய்றவங்க..! அசாமில் புற்று நோயாளிகளுக்கு வீடு தேடிச் சென்று சிகிச்சை அளித்த அழகிய தமிழ் மகன்..! நெகிழ வைத்த டாக்டர்!

ஏழை மக்களுக்காக வீடு தேடி இலவசமாக மருத்துவம் பார்த்து வந்த தமிழ் டாக்டர் சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கபட உள்ளது.


தமிழகத்தை சேர்ந்த புற்றுநோய் மருத்துவர் ரவி கண்ணா, அஸ்ஸாம் மாநிலத்தின் ஏழை மக்களுக்காக கடந்த 2007 ஆம் ஆண்டு முதலாக தொண்டாற்றி வருகிறார். 13 ஆண்டுகளாக அங்குள்ள ஏழை மக்களுக்கு புற்று நோய்க்கான மருத்துவம் கொடுத்து வருகிறார்.

தினக்கூலியாக வேலைப்பார்த்து வந்த ஏழை மக்களுக்கு அவர்கள் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்க மருத்துவ மனையிலேயே வேலைக்கும் சேர்த்துள்ளார். இவ்வாறு பாமர மக்களுக்காக தனது சுயநலம் பாராமல் அயராது உழைத்து வந்த மருத்துவர் ரவி கண்ணா.


அவரது மகத்தான சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கி மரியாத செலுத்தியுள்ளனர்.