ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிறையில் இருக்கிறார் ப.சிதம்பரம். அவரை கைதுசெய்து விசாரணை நடத்தவேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது. அதுகுறித்து இன்று நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
ப.சிதம்பரத்தை மீண்டும் கைது செய்யப் போறாங்களாம்! 30 நிமிட விசாரணை போதுமா? என்னப்பா நடக்குது இங்கே!
இந்த மனு நீதிபதி அஜய் குமார் குஹார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்க துறை சார்பில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அவரை கைது செய்ய அனுமதி அளிக்க வேண்டும்'' என்று கோரப்பட்டது.
சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ''ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கு குறித்த அனைத்து விஷயங்களையும் சி.பி.ஐ. விசாரித்து முடித்து விட்டது. மீண்டும் அமலாக்க துறையும் விசாரிக்க வேண்டுமா?'' என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து டெல்லி திகார் சிறைக்குச் சென்று 30 நிமிடங்கள் விசாரணை செய்யலாம் என்றும் அதற்கு மீறி தேவைப்பட்டால் கைது செய்வது குறித்து முடிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆக, சிதம்பரத்தை மீண்டும் கைது செய்யப் போறாங்கோ...